Skip to main content

வயிற்றுப் புண்ணுக்கு (அல்சர்) 6 நிரந்தர தீர்வுகள்

Spread the love

பெரும்பாலோனோர் வயிற்றுப்புண் என்றதும் உடனே மருத்துவமனைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால் எல்லா வியாதிகளுக்கும் மருத்துவமனை ஒன்றே தீர்வு ஆகாது. சிறிய சிறிய உடல்நல பிரச்சனைகளுக்கு வீட்டிலிருந்தே தீர்வு காணலாம். வயிற்றுப் புண்ணை சரிசெய்ய வீட்டில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் மருத்துவ குணம் கொண்ட உணவு பொருட்களே போதுமானது.

1.மணத்தக்காளி கீரை

சிலர் மணத்தக்காளி கீரையை கசப்பு காரணமாக தவிர்க்கின்றனர். ஆனால் வயிற்றுப் புண்ணை சரிசெய்ய மணத்தக்காளி கீரை பெறும் பங்காற்றுகிறது. வாரம் மூன்று முறை மணத்தக்காளிக் கீரையை வதக்கி சாப்பிடும் போது இரைப்பையில் ஏற்பட்ட புண் சரியாகும்.

2.தேங்காய் பால்

தேங்காய் பாலை தினமும் உணவில் சேர்த்து வர நாள்பட இருந்த வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

3.காரமான உணவுகளை தவிர்த்தல்

காரம் அதிகம் கொண்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுகள் உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை அதிகரிக்கும். இதனால் வயிற்றுப் புண் அதிகமாக வாய்ப்புகள் உள்ளது. எனவே மசாலா பொருட்களை சேர்க்காமல் சில நாட்கள் சமைத்து உண்டால் விரைவில் குணமாகும்.

4.மாதுளை


உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை மாதுளம்பழம் சமநிலைப்படுத்தும் மாதுளம் பழத்தை சாறாக செய்து குடிக்காமல் அப்படியே சாப்பிட்டால் எச்சில் அதிகம் சுரந்து வயிற்றுப் புண்ணை ஆற்றும்.

5.வெள்ளைப்பூசணி சாறு


வெள்ளைப்பூசணி சாறு மிகச்சிறந்த நிவாரணி.வயிற்றுப் புண் இருப்பவர்கள் தினமும் வெறும் வயிற்றில் பூசணி சாறு எடுத்துக் கொள்ளும் போது ஒரு வாரத்தில் சரியாகி விடும்.

6.முட்டைக்கோசு சாறு


முட்டைகோசு சாறு தண்ணீர் கலந்து தினமும் மூன்று வேளை எடுத்துக்கொள்ளும்போது இரண்டு நாட்களிலேயே வயிற்றுப் புண் சரியாகிவிடும்.முட்டைக்கோஸ் சாறு மிகவும் கசப்பாக இருக்கும். அதற்காக சிறிது சர்க்கரை சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பெரும்பாலும் இல்லத்தரசிகளே வயிற்றுப்புண்ணால் பாதிக்கப்படுகின்றனர். ஏனென்றால் அவர்கள் வீட்டு வேலைகள் செய்து கொண்டும் குழந்தைகளை கவனித்துக் கொண்டும் உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதை தவிர்க்கின்றனர். எனவே பெண்கள் இதனை தொடர்ந்து கடைபிடித்து வரும்போது வயிற்றுப்புண் குணமாகும்.

நாள்பட்ட வயிற்று புண் கேன்சராக மாறவும் வாய்ப்புகள் உள்ளது எனவே ஆரம்பத்திலேயே அதனை சரி செய்து கொள்வது நல்லது.

மேலே குறிப்பிட்டுள்ளவற்றை நீங்கள் தொடர்ந்து கடைபிடித்து வரும் போது உங்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை மற்றும் வயிற்றுப்புண் நிரந்தரமாக சரியாகிவிடும்.