Skip to main content

மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 4 இயற்கை பொருட்கள்

Spread the love
\

நமக்கு பெரும்பாலும் நோய் வரும்போது மெடிக்கலில் தேவையான மருந்துகளை வாங்கி சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டு உள்ளோம்.தற்போது மழைக்காலம் வேறு தொடங்கிவிட்டது.
ஒருசிலர் பெயின் கில்லர், ஆன்டிபயாடிக் போன்ற மருந்துகளை தெரிந்து வைத்துக்கொண்டு கேட்டு வாங்கி உபயோகிக்கின்றனர்.
இதுபோன்று ஆன்ட்டிபயாட்டிக்யை மருந்துகள் மூலம் எடுத்துக் கொள்ளாமல் இயற்கையான தாவரங்களில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

நாம் அன்றாடம் உபயோகிக்கும் கீரை, காய்கறிகள், பழங்கள் இவற்றிலேயே ஏராளமான ஆன்ட்டிபயாட்டிக் உள்ளது.
நம் முன்னோர்கள் வேர் ,காய், தண்டு, இலை, விதை இவற்றை எடுத்து லேகியம் மற்றும் கசாயமாக பயன்படுத்தினர். அவைகளே தற்போது மாத்திரை வடிவில் விற்பனையாகின்றது.
“வருமுன் காப்பதே சிறந்தது”என்னும் தமிழ் பழமொழிக்கு ஏற்ப இனி இயற்கையாக கிடைக்கும் ஆன்டிபயாடிக் மூலம் உங்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்ட விடாமல் தடுக்கலாம்.

1.இஞ்சி

பலவிதமான ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்க இஞ்சி பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இஞ்சி 2000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.நீங்கள் தினமும் இஞ்சி சேர்த்து டீ மற்றும் சுக்கு காபி ஆகியவற்றை குடிக்கும் போது உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்குவதோடு மட்டுமல்லாமல் அழகு குறைபாடுகளையும் நீக்குகின்றது.
மேலும் சுவாசப் பிரச்சினைகளையும் இஞ்சி சரி செய்கின்றது.

2.மஞ்சள்

உடலில் உள்ள வியாதிகளை எதிர்த்து போராட உதவுவதில் மஞ்சள் பெரும் பங்கு வகிக்கின்றது.

மஞ்சள் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ள பொருளாகும். மஞ்சளை தினமும் உணவில் உபயோகித்து வந்தால் கல்லீரல் நோய், மூட்டுவலி, ஞாபக மறதி ஆகியவற்றை சரி செய்கின்றது.

பாலில் மஞ்சள் கலந்து குடித்து வர சளி ,இருமல் தொல்லை நீங்கும்.
மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

3.எலுமிச்சை

பெரும்பாலோனோர் எலுமிச்சை சாப்பிட்டால் உடல் எடை மட்டும்தான் குறையும் என்று நினைக்கின்றனர்.
ஆனால் எலுமிச்சை சாறு தொடர்ந்து குடித்து வருபவர்களுக்கு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்றுநோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கிறது.

பெண்கள் எலுமிச்சை சாற்றை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது எலுமிச்சையில் இருக்கும் கார்சினோஜென் மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.

4.பூண்டு

பூண்டில் அல்லிசின்,சல்ஃபர் ,ஜிங்க் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் அடங்கி உள்ளன. இவை ஆண்டிபயாடிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்தி ஆரோக்கிய நன்மைகளையும் அழகு நன்மைகளையும் வழங்குகின்றன.

பூண்டு இதய நோய்களை தடுப்பது மட்டுமல்லாமல் பல்வேறு தொற்று நோய்களை தடுக்கவும் உதவுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *