Skip to main content

மன அழுத்தத்தில் இருந்து விடுபட 5 சிறந்த தீர்வுகள்

Spread the love

மன அழுத்தம் என்பது ஒரு உணர்வு நாம் சூழ்நிலையை நமக்கு சாதகமாக கையாள முடியாத போது மன அழுத்தம் வருகிறது.
உண்மையில் மன அழுத்தம் என்பது ஒரு பிரச்சினை அல்ல அதன் ஆரம்பப்புள்ளி ஏதாவது ஒரு சிக்கலில் இருந்து தொடங்குகிறது.

மன அழுத்தத்திற்கான காரணம்:

  • எதிர்பார்ப்புகள்
  • சமூக அழுத்தம்
  • பணம்
  • குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இது போன்று இன்னும் பல.

பக்க விளைவுகள்:

  • தலைவலி
  • வயிற்று உபாதைகள்
  • இரத்த அழுத்தம் அதிகரிப்பது
  • தற்கொலை எண்ணங்கள் உருவாக்குவது.

ஒவ்வொருவருக்கும் எந்த சூழ்நிலையிலும் தங்கள் வாழ்க்கையில் மன அழுத்தம் உண்டாகும். ஆனால், அனைவருக்கும் அதற்கான தீர்வு இல்லை. மன அழுத்தத்தை சமாளிக்க சில வழிகள் கீழே.

1.நண்பர்கள்:

மன அழுத்தத்தை சமாளிக்க நண்பர்கள் சிறந்த தீர்வாக இருப்பார்கள். அனைத்து தருணங்களையும் பகிர்ந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் வாழ்நாள் முழுவதும் ஒரு நம்பிக்கையான நண்பர் இருக்க வேண்டும்.

நாம் குழப்பமான அல்லது மனச்சோர்வடைந்த சூழ்நிலையில் இருக்கும்போதெல்லாம் நம் மனது சரியான முடிவைஎடுக்காது . அப்பொழுது ஒரு நல்ல முடிவை எடுக்க நண்பர்களால் நமக்கு உதவ முடியும். எனவே நண்பர்களை உருவாக்குங்கள். உங்கள் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளுங்கள்.

2.தியானம்:

தியானம் நம் மனதை நிதானப்படுத்தவும், பதட்டத்தை குறைக்கவும் உதவும். குறிப்பிட்ட விஷயத்தில் மனதை மையப்படுத்த மட்டுமே தியானம் பயன்படுத்தப்படுகிறது என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால், இது சில நேரங்களில் நம்மைச் சுற்றியுள்ள பிரச்சினைகளிலிருந்து வெளியே வர உதவுகிறது.

கோயிலுக்குச் செல்வதும் மனதை நிதானப்படுத்த உதவும். இதனால் எதிர்மறை எண்ணங்களிலிருந்து மனதை மாற்றவும் முடியும்.

3.தூக்கம்:

உங்களுக்கு போதுமான தூக்கம் வரவில்லை என்றால், மன அழுத்த அளவு அதிகரிக்கும். குறைந்தபட்சம் 6-8 மணிநேர தூக்கம் ஆரோக்கியமான பழக்கமாகக் கருதப்படுகிறது. இது 10PM முதல் 06AM வரை .
மேலும் தூக்கம் மன அழுத்தத்தை குறைக்கும். ஆழ்ந்த தூக்கம் உங்கள் பிரச்சினைகளில் முடிவுகளை எடுக்க உதவுகிறது.

4.இசை:

இசை சிறந்த மன அழுத்த மேலாண்மை கருவியாகும்.,இசையை விரும்புங்கள். ஒவ்வொரு நாள் காலைப் பொழுதையும் இசையுடன் தொடங்குங்கள்.மன அழுத்தத்தில் இருக்கும் போது சோகமான பாடல்கள் கேட்பதை தவிருங்கள். அவ்வாறு கேட்பதால் மேலும் மன அழுத்தம் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

உங்களுக்கு பிடித்த பாடல்களை கேளுங்கள், இது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மகிழ்ச்சியை உருவாக்கவும் உதவும். குறிப்பாக மெதுவான கிளாசிக்கல் இசை மன அழுத்த ஹார்மோனின் அளவைக் குறைக்கும். இது பதட்டத்தையும் குறைக்கும். இசையைக் கேட்பதால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.

5.பொதுவான எண்ணங்கள்:

எப்போதும் நேர்மறையாக இருங்கள். எதிர்மறை எண்ணங்கள் மற்றும் எதிர்மறை நபர்களைத் தவிருங்கள்.
புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற மன அழுத்தத்தைக் கையாளும் வேறு வழிகளில் ஈடுபட வேண்டாம்.இது உங்களுக்கு சிறிது நிவாரணம் தரக்கூடும். ஆனால் இது எதிர்காலத்தில் உடல் நலத்திற்கு பிரச்சினைகளைத் தருகிறது.

நீண்ட நாட்கள் மன அழுத்தம் இருக்கும்போது மன நல மருத்துவரை அணுகுவது நல்லது.