Skip to main content

நல்ல பழக்கங்களை உருவாக்க கூடிய 6 செயல்கள்

Spread the love

உயர்ந்த குறிக்கோள் மட்டும் இருந்தால் வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறீர்களா?.அது தவறு உயர்ந்த குறிக்கோள் மட்டும் ஒருவனை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லாது.உங்களது நடை, உடை, பாவனை போன்ற மேலும் பல நல்ல பழக்க வழக்கங்களும் சேர்ந்து தான் உங்களின் வெற்றியை முடிவு செய்யும்.
இங்கே சில நல்ல பழக்கங்களை தொகுத்து வழங்கியுள்ளேன்.

1.ஆபத்தில் உதவுவது

நம் உடன் இருப்பவர்கள் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தால் நம்மால் முடிந்த அளவு அவர்களுக்கு உதவ வேண்டும். அது பண உதவியாகவும் பொருள் உதவியாக இருக்கலாம்.இவ்வாறு செய்வதால் உங்களின் உதவும் குணம் இன்னும் மேம்பட வாய்ப்புகள் அதிகம். உதவி பெறுபவர்கள் எதிர்வரும் காலங்களில் உங்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படும்போது தயங்காமல் உதவுவர்.

2.குறை கூறாது இருப்பது

நமது நட்புகள் மற்றும் சொந்தங்களில் நாம் சொல்வதை அவர்கள் ஏற்க மறுத்தாலும் தவறு செய்தாலும் அவர்களை குறை கூறுவது என்பது நல்ல பழக்கங்களில் சேராது.அன்பாக சொல்வதால் ஒருவேளை அவர்கள் திருந்த வாய்ப்புகள் உள்ளது . குறை கூறுவதால் அவர்கள் எந்த பயனும் அடையப்போவதில்லை . ஆனால் மற்றவர்களை குறை கூறுவது என்பது நம்முடைய நல்ல பழக்கங்களுக்கு அது பாதிப்பை அளிக்கக்கூடும்.

3.சேமிப்பு

சேமிப்பு என்பது நமது அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒன்று அதனை சிறு வயது முதலே கடைபிடித்தால் பிற்காலத்தில் அதிக பலன்களை பெறலாம்.ஒவ்வொரு மனிதனும் தனது திருமணத்திற்குப் பின் அதிக பணச் சுமைகளை சந்திக்கின்றனர்.அதற்குப்பின் வருந்துவதை விட திருமணத்திற்காக வேலைக்கு செல்லும் காலத்திலேயே சிறுக சேமித்து வந்தால் திருமண காலத்தில் ஏற்படும் இக்கட்டான சூழ் நிலையிலிருந்து தப்பிக்கலாம்.

சேமிப்பு போன்ற நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றும் போது நம் வாழ்க்கையின் நம்மீது நமக்கு அதிக நம்பிக்கை ஏற்படும்.

4.ஆரோக்கியமான உணவுகள்

உணவு என்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர ருசிக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது.கடைகளில் கிடைக்கும் உணவு மிகவும் ருசியாக இருக்கும் ஆனால் அவை அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என சொல்ல முடியாது.

ஒவ்வொரு குடும்ப தலைவிகளுக்கு அந்த குடும்பத்தின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு உண்டு. நல்ல உணவுப் பழக்கங்களை பின்பற்றுவது ஒரு சிறந்த கலை. இதனால் நம் உடல் ஆரோக்கியமும் நல்ல சிந்தனைகளும் மேம்படும்.

5.தூய்மை

நமது உடலையும் வீட்டையும் சுத்தமாக வைக்க கற்றுக் கொள்ள வேண்டும்.இரண்டு முறை பல் துலக்குதல் மற்றும் குளிப்பதால் உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.தமிழில் “கந்தல் ஆனாலும் கசக்கி கட்டு “என்ற பழமொழி உண்டு. இது தூய்மைக்கு மிகவும் சிறந்த எடுத்துக்காட்டு.எனவே தினமும் துணிகளை நன்கு துவைத்து பிறகு பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்று.

தூய்மை பற்றி குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கடைபிடிக்க கற்றுக் கொடுத்தால் அவர்களுக்கு இது அன்றாட பழக்கங்களாக மாறிவிடும்.
அதேபோல வீட்டில் உள்ள தேவையான தேவையில்லாத பொருட்களை பிரித்து, தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்தி விட்டால் வீடு தூய்மையாக இருக்கும்.

6.மனதார பாராட்டுங்கள்

ஒருவர் நல்ல செயல்கள் செய்கின்ற போது அதனை மனமுவந்து பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்வதால் அவர்கள் மேலும் அத்தகைய நல்ல செயல்களை செய்ய முற்படுவார்கள். ஒருவரை நாம் பாராட்டும் போது நாம் எதையும் இழக்கப் போவதில்லை.இந்தப் பழக்கம் தொடர்ந்து கடைபிடித்தால் நம் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகி பாராட்டுப் பெறுபவர்களும் நேர்மறை எண்ணங்களை பெறுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *