Skip to main content

தேனீர் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால்..?

Spread the love

தேனீர் உடலிலுள்ள எலும்புக்கு அதிக சக்தியை அளிக்கக் கூடியது. தேநீரை ஒருமுறை எடுத்துக்கொள்வதால் சுறுசுறுப்பையும், நாள் முழுக்க புத்துணர்ச்சியும் பெறலாம். அதுவே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அதிக தேநீர் உடலுக்கு அதிக கேடுகளை விளைவிக்கும்.

ஒரு கப் தேனீர் என்பது ஆரோக்கியமான ஒன்று. உங்கள் எலும்புகளை பலப்படுத்தும். அதுவே இரண்டு கப்பிற்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உங்கள் எலும்புகளை பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

டீயில் இருக்கும் நச்சுத்தன்மை கீழ்கண்ட பக்க விளைவுகளை உண்டாக்குகிறது.

  • கவனமின்மை
  • தூக்கம் கெடுதல்
  • அமைதியின்மை
  • நெஞ்செரிச்சல்
  • வயிற்று புண்

மேலும் அதிக அளவு டீ குடிப்பதால் அதில் உள்ள டானிஸ் என்ற வேதிப்பொருள் நமது உடம்பில் இரும்புச் சத்து சேர விடாமல் தடுக்கின்றது.

மதுப்பழக்கத்தை போலவே டீ-யும் அதிகளவு குடிக்கும்போது அது டீ பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகின்றது. அதன்பிறகு டீ இல்லாமல் நமது உடல் ஒரு நிலையான தன்மையை பெற முடியாது என்ற நிலைக்கு கொண்டு வந்து சேர்க்கும்.

நல்ல உடல் ஆரோக்கியத்தை பெற ஒரு நாளைக்கு ஒரு டீ மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற நேரங்களில் டீ குடிக்க வேண்டும் என்று தோன்றினால் அதற்கு பதிலாக சுக்கு காபி, பழச்சாறு என எடுத்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *