Skip to main content

சாப்பிட்ட உணவு செரிக்கவில்லை என்பவர்களுக்கு 5 தீர்வுகள்

Spread the love

சிலர் அசைவம் அல்லது எண்ணையில் பொரித்த உணவு வகைகள் அதிகம் சாப்பிட்டுவிட்டு வயிறு உப்புசமாக இருக்கிறது என்று கடையில் கிடைக்கும் செயற்கையாக செய்யப்பட்ட மாத்திரைகள் அல்லது குளிர்பானங்களை உட்கொள்வர். இவ்வாறு செயற்கையாக தயாரிக்கப்பட்ட பானங்கள் மேலும் அஜீரணத்தை தான் உண்டாகுமே தவிர நிவாரணம் கிடைக்காது. ஆனால் அதற்கு பதிலாக கீழ்கண்ட மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்களை எடுத்துக் கொண்டால் வயிறு சரியாகும்.

1.புதினா

வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் மற்றும் வாந்தி போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக புதினா விளங்குகின்றது.
மிகவும் வாசனையாக உள்ள புதினா அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பொதினா உட்கொண்டால் வயிற்று உப்புசம் குறைந்து அதிக பசியை தூண்டும்.

2.சோம்பு

சோம்பு வாய் புத்துணர்ச்சிக்கு மட்டுமல்லாது உணவு செரிமானத்திற்கும் பெரும் பங்கு வகிக்கிறது.
சிலர் பிரியாணி, அசைவம் போன்ற ஹெவியான உணவுகளை உட்கொண்ட பின் சோம்பு எடுத்துக் கொள்வார்கள். ஏனென்றால் சோம்பு எந்தவகையான உணவாக இருந்தாலும் செரிக்க வைக்கும் ஆற்றல் வாய்ந்தது.

3.பப்பாளி

பப்பாளி வயிற்றை விரைவாக சுத்தம் செய்யும்.
தினமும் ஒரு துண்டு பப்பாளி சாப்பிட்டு வந்தால் சாப்பிட்ட உணவு எளிதாக செரிமானம் செய்யும்.
மேலும் பப்பாளி ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்கிறது.

4.அன்னாசிப்பழம்

அசைவ உணவுகள் சாப்பிட்ட பிறகு செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதை விட்டு விட்டு அன்னாசிப்பழ சாறு எடுத்துக் கொண்டால் அசைவம் சீக்கிரம் செரிமானமாகும்.

5.கரும்பு சாறு

கரும்பு சாறில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தைக் சமன் செய்ய உதவுகிறது.மேலும் செரிமானத்தை தூண்டும் சக்தி கரும்பிற்கு அதிகம் உள்ளது.
உங்களுக்கு ஜீரணம் ஆகவில்லை என்று தோன்றினால் கரும்புச் சாறு குடித்தால் எளிதில் ஜீரணமாகும்.