Skip to main content

வார இறுதியில் சலிப்பான நேரத்தை மாற்றும் 12 சுவாரஸ்யமான பொழுதுபோக்குகள்

Spread the love

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் சில பொழுது போக்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பொழுதுபோக்குகள் வாழ்க்கையில் நம்பிக்கையை உருவாக்குகின்றன. ஏனென்றால் எதையாவது நன்றாக கற்றுக் கொள்வது வாழ்க்கைக்கு மிகவும் பலனளிக்கும்.அது நம்மை மகிழ்விக்கும், மேலும் நம் வேலையில் சிறப்பாக செயல்பட உதவும்.

இங்கே நம் வாழ்க்கை முறையை மாற்றக் கூடிய சில பொழுது போக்குகளை தொகுத்து வழங்கியுள்ளேன்.

1.பைக் / மிதிவண்டி சவாரி

பைக் சவாரி என்பது வார இறுதி நாட்களில் பொழுது போக்க மிகவும் சிறந்த வழி. ஒவ்வொரு நாளும் நாம் மின்னணு சாதனங்களுடன் வாழ்கிறோம். நம் மனதை புதியதாக வைத்திருக்க இயற்கையான இடத்திற்கு பயணிப்பது நல்லது. இடங்கள் ஒரு மலைப் பிரதேசமாக இருக்கலாம், நதி / நீர்வீழ்ச்சியாக இருக்கலாம் அல்லது பூங்காவாக இருக்கலாம். அங்கே நேரத்தைச் செலவிடுங்கள் & இயற்கையை உணருங்கள்.
அதிக நண்பர்களை இதுபோன்ற சவாரிக்கு அழைத்துச் செல்வதால் அது உங்களது வாழ்வில் மிகவும் மறக்க முடியாத அனுபவமாக அமையலாம்.

2.பொருட்களை ஒழுங்கமைத்தல்

வீட்டை சுத்தமாக வைத்திருப்பது எளிதான காரியமல்ல வாரம் முழுவதும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் பயன்படுத்துகின்றோம். வேலைக்கு மட்டும் படிக்கச் செல்லும் நபர்கள் அனைத்து பொருட்களையும் உபயோகிப்பதால் சில பொருட்களை தவற விடுகின்றோம்.அதனை வார இறுதியில் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து ஒழுங்கமைத்தால், அடுத்து வரும் நாட்களில் தேடாமல் மிகவும் எளிமையாக எடுத்து உபயோகித்து கொள்ளலாம்.

3.சமையல்

நாம் எப்பொழுதும் மிகவும் சுவையான உணவை விரும்பி சாப்பிட நினைக்கின்றோம்.
வீட்டில் உங்கள் நேரத்தை கடத்த சமையல் என்பது ஒரு வகை கலை. அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவை தான் சமைக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு எளிய மில்க் ஷேக் அல்லது ஒரு பல சாலட் செய்யுங்கள் அதுவே போதுமானது.
அல்லது சமையல் உங்களுக்கு மிகவும் பரிச்சயம் என்றால் புதிய புதிய உணவுகளை சமைத்து உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அருகாமையில் உள்ளவர்களுக்கு வார இறுதியில் கொடுத்து மகிழுங்கள்.

4.கைவினைப்பொருட்கள் தயாரித்தல்

உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், ஆம் நிச்சயமாக நீங்கள் அவர்களுக்காக சில கைவினைப்பொருட்களைச் செய்து கொடுத்து அதை எவ்வளவு விரும்புகிறார்கள் என்று கேளுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு காகிதக் கைவினை, பொம்மை தயாரித்தல் போன்ற சில கைவினைப்பொருட்களைக் கற்றுக் கொடுங்கள். ஆனால் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் மதிப்புமிக்கது. உங்களை நன்றாக புரிந்துகொள்ள இது அவர்களுக்கு உதவும்.

5.தோட்டம் அமைத்தல்

சிறிது நிலம் இருந்தால் அதில் காய்கறியும் பூக்களையும் நடவு செய்யலாம்.இது மிகவும் சுவாரசியமான பொழுதுபோக்காகவும் வீட்டிற்கு தேவையான ஆக்சிஜனையும் கொடுக்கும்.காய்கறிகளை வெளியிலிருந்து வாங்குவதை விட வீட்டில் வளர்க்கும் போது பணத்தை மிச்சப்படுத்தலாம்.

6.நீச்சல்

நீச்சல் ஒரு சுவாரசியமான உடற்பயிற்சி.நீச்சல் கிளப்பில் சேர்ந்து ஒவ்வொரு வார இறுதியில் நீச்சலுக்கு காக நேரத்தை செலவிடுங்கள். ஏனெனில் இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

நீச்சல் அடிப்பதை வழக்கமாகக் வைத்திருக்கும் மக்கள் இதயக் கோளாறு மற்றும் நீரிழிவு நோய்க்கு அஞ்சத்தேவையில்லை.உடல் செயல்பாடுகளில் குறைந்த அக்கறை கொண்ட இன்றைய தலைமுறை இதனை ஒரு பொழுதுபோக்காக எடுத்து செயல்படுங்கள்.

7.ஆடைகளை அடுக்கி வைத்தல்

உங்களுடைய அளவின் அடிப்படையில் துணிகளை பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். சரியாக அடுக்கி வைக்கப் படாமல் இருக்கும் துணிகள் அதிக இடத்தை ஆக்கிரமித்து கொள்ளும். அனைத்து துணிகளையும் அடுக்கி வைக்க 30 நிமிடமே எடுத்துக்கொள்ளும் ஆனால் துணிகளை அடுக்கி வைத்தால் ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் நேர்மறையான எண்ணங்களுடன் தொடங்கலாம்.

8.உங்கள் அன்புக்குரியவருடன் நேரத்தை செலவிடுங்கள்

உங்கள் அன்புக்குரியவருடன் நேரத்தை செலவிடுவது ஒருபோதும் வீணாகாது. குறிப்பாக உங்களை அதிகமாக நேசிக்கும் நபருக்கு நேரம் கொடுங்கள். இது எப்போதும் உங்கள் உறவை வலுவாக வைத்திருக்கும். மாலை நேரங்களில் பூங்காக்களில் கை கோர்த்தவாறு உங்கள் துணையுடன் ஒரு சிறிய நடை போடுங்கள்.

9.ஓவியம் வரைவது

எல்லோருக்கும் ஓவியம் குறித்த சில அனுபவம் இருக்கும். ஓவியம் வரையும்போது பார்ப்பதற்கு அழகாகத் தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.முதலில் நீங்கள் ஒரு ஓவியம் வரைய முயற்சி செய்யுங்கள் அதன் பிறகு நீங்கள் அதிக மகிழ்ச்சியை உணர்வீர்கள்.

10.புகைப்படம் எடுத்தல்

புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது என்பது நமது நினைவை மேம்படுத்த மூளைக்கு உதவுகிறது. நல்ல மற்றும் ஆக்கபூர்வமான புகைப்படங்களை எடுக்க டிஎஸ்எல்ஆர் தான் வைத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நாம் வைத்திருக்கும் மொபைல் போனே போதுமானது.சிறப்பு நிகழ்வுகள், நபர்கள் மற்றும் புதிய இடங்களை பதிவு செய்வதன் மூலம் புதிய அனுபவங்களை பெற முடியும்.

11.புத்தகம் வாசிப்பது மற்றும் எழுதுதல்

புத்தகங்களைப் படிப்பது நமது அறிவை வளர்த்துக் கொள்ளவும், நமது சிந்தனையை மேம்படுத்தவும் உதவும். உங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் கதைப்புத்தகங்கள் அல்லது கட்டுரைகளைப் படியுங்கள்.
முழு வாரத்திலும் மறக்கமுடியாத நிகழ்வுகளின் விவரங்களுடன் ஒவ்வொரு வார இறுதியில் நாட்குறிப்பில் எழுதுங்கள். சில வருடங்களுக்குப் பிறகு இதைப் படிக்கும்போது இதன் உண்மையான மதிப்பு மற்றும் மகிழ்ச்சியை நீங்கள் உணருவீர்கள் .

12.கார்ட்ஸ் விளையாடுங்கள்

கார்ட்ஸ் என்பது நேரத்தை செலவழிக்க ஒரு உற்சாகமான விளையாட்டு. கார்டுகளை மிகவும் வேடிக்கையாக விளையாட உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களை அழைக்கவும்.

கார்டில் நாம் விளையாடக்கூடிய பல்வேறு வகையான விளையாட்டுக்கள் உள்ளன. கார்ட்ஸ் நாம் விளையாடும் போது எடுத்துக்கொள்ளும் நேரம் உண்மையில் நம்மால் அளவிட முடியாது அது மிகவும் சந்தோஷமான தருணமாக இருக்கும்.