Skip to main content

ஏன் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது

Spread the love

பெரும்பாலான இந்துக்கள் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். அதற்கு காரணம் இது பெருமாள் கடவுளுக்கு உகந்த காலம், முக்கியமாக பெருமாள் கடவுளை வணங்குபவர்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்லிவந்தனர்.

ஆனால் உண்மையான காரணம் புரட்டாசி மாதம் தென்னிந்தியாவில் மழை ஆரம்பிக்கும் காலம். இந்த மழை பூமியில் உள்ள சூட்டை அதிகரித்து நமது உடலுக்கு தேவையில்லாத பிரச்சனைகளை உண்டாக்கும்.இந்த வெப்பம் வெயில் காலத்தைக் காட்டிலும் அதிகம். இதனால் சளி காய்ச்சல் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் இந்த காலத்தில் அதிகரிக்கும்.

இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கவே நம் முன்னோர்கள் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என தவித்து வந்தனர்.

துளசி


துளசி இலை மூலிகை குணம் கொண்டது. இது சளி மற்றும் வயிற்று பிரச்சினைகளை சரிசெய்யும்.
இதனாலேயே கோயிலுக்குச் சென்று துளசி செடியை சுற்றி வந்து துளசியை வாயில் போட்டு மெல்ல வேண்டும் என்று சொல்லி வைத்தனர்.

காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் துளசி இலை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.