Skip to main content

உங்களுக்கு பரோட்டா ரொம்ப பிடிக்குமா? அப்போ முதல்ல இத படிங்க

Spread the love

பரோட்டா என்பது இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையினால் மைதாவில் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் சாதாரண பரோட்டா வாகத்தான் இருந்தது.நம் மக்கள் நாவின் சுவைக்கு ஏற்ப கொத்து பரோட்டா ,முட்டை பரோட்டா ,சில்லி பரோட்டா ,வீச்சு என்று விதவிதமாக தயாரித்து உண்ண ஆரம்பித்தனர்.
இன்றும் ஒரு சிலருக்கு பரோட்டா சாப்பிடாமல் அந்த நாள் முடியாது என்று மாறிவிட்டனர்.
நாம் ஹோட்டல்களுக்கு சென்றால் இரவு உணவாக பெரும்பாலும் பரோட்டாவையே தேர்ந்தெடுக்கிறோம்.
பரோட்டா செய்யும் மைதாவை எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?

வேதிப்பொருட்கள்:

மைதா என்பது கோதுமையின் எண்டோஸ்பெர்மில் இருந்து தயாரிக்கப் படுகின்றது. எண்டோஸ்பெர்ம் என்பது கோதுமை உள்பகுதியை அரைத்தால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனுடன் அசோடிகார் போனமைட், குளோரின் வாயு, பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide) போன்ற வேதிப்பொருட்கள்,மிருதுவாக மாற்ற அலக்சான் எனும் வேதிப்பொருள் சேர்த்து தயாரிக்கப்படுகின்றது.

இது உடலுக்கு மிகவும் பாதிப்பை உண்டாக்கக் கூடிய வேதிப்பொருட்கள்.இந்த வேதிப்பொருள் மனிதனின் உடம்பில் சுரக்கும் இன்சுலினின் அளவை குறைக்கின்றது. இதனாலேயே பெரும்பாலும் சர்க்கரை வியாதிகள் வர காரணமாகின்றது. அடிக்கடி பரோட்டா சாப்பிடுவதால் சர்க்கரை வியாதி இல்லாதவர்களுக்கும் சர்க்கரை வியாதி பாதிப்பு ஏற்படும்.

இந்த மைதா சேர்த்த பரோட்டாவில் நார்ச்சத்து, விட்டமின்,புரதம் போன்ற எதுவும் இல்லாததினால் எளிதில் ஜீரணமாகாமல் மலச்சிக்கல் அதிகரிக்கும் அபாயமும் உண்டு.

ஆனால் நம் மக்கள் தான் எத்தனை மருத்துவர்கள் சொன்னாலும் கேட்பதில்லையே.ஏனென்றால் பரோட்டாவில் அவ்வளவு சுவை உண்டு என்பதால் அதனை விட மனமும் வரவில்லை. ஆனால் சுவையை விட உடல் ஆரோக்கியமே முக்கியம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.பரோட்டா மட்டுமல்லாது மைதா சேர்த்த உணவுப் பொருட்கள் அனைத்தையும் தவிர்ப்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.