Skip to main content

இனிமே இந்த 8 வகையான ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணுங்க

Spread the love

நாம் சாப்பிடும் உணவுகளில் சில உடலுக்கு நன்மை தரக் கூடியதாகவும் பல தீமை தரக்கூடியதாகவும் இருக்கும்.
ஸ்னாக்ஸ் என்றாலேபஜ்ஜி, வடை பேக்கரிகளில் செய்யப்பட்ட பிஸ்கட், கேக், பப்ஸ், சிப்ஸ் இவைகளே நமது தேர்வாக இருக்கிறது.
ஆனால் இதுபோன்ற தின்பண்டங்களை தவிர்த்து கீழ்கண்ட தின்பண்டங்களை எடுத்துக் கொண்டால் நமக்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.

1.கடலை மிட்டாய்

ஆரோக்கியமான தின்பண்டங்களில் முக்கிய இடத்தை வகிப்பது கடலை மிட்டாய்.
கடலை மிட்டாய் உள்ள புரதச் சத்துக்கள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
மேலும் நிலக்கடலையை வறுத்து கூட சாப்பிட எடுத்துக் கொள்ளலாம்.

2..டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியது இதனை நீங்கள் வாங்கி ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் எப்பொழுதெல்லாம் ஸ்னாக்ஸ் சாப்பிடணும் போல தோன்றுகிறதோ அப்பொழுது இதை சாப்பிடலாம்.
ஹோம்மேட் சாக்லேட் மிகவும் நல்லது.

3.அவித்த முட்டை

ஒவ்வொருவரும் தினமும் ஒரு அவித்த முட்டை உண்பது மிகவும் நல்லது இதில் இருக்கும் புரோட்டீன் உடல் எலும்புகளை பலப்படுத்தும்.
அவித்த முட்டை சாப்பிட்டால் வேறு ஏதும் சாப்பிடவும் தோணாது. அதுவே ஸ்நாக்ஸ் சாப்பிட்ட திருப்தி ஏற்படும்.

4.கேரட்

தினமும் பச்சை கேரட் சாப்பிடும் போது கண் பார்வைத்திறன் தெளிவாக இருக்க உதவுகின்றது.
பச்சை கேரட் சாப்பிட பிடிக்காத போது நீங்கள் அதை கேரட் அல்வா,கேரட் கீர் செய்து வைத்துக் கொண்டு சாப்பிடலாம்.
அதிக நார்ச்சத்துள்ள கேரட் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறு மலச்சிக்கல் போன்ற குறைபாடுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.

5.பழ சாலட்

நீங்களே வீட்டில் பல சாலட் தயாரித்துக் எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
பப்பாளி ,மாதுளை மற்றும் தர்பூசணி இவற்றை கொண்டு எளிமையாக பல சாலட் தயாரிக்கலாம்.

6.பாதாம்

மற்ற தின்பண்டங்களை சாப்பிடும்போது அது கெட்ட கொழுப்பாக மாற வாய்ப்பு உள்ளது. ஆனால் பாதாம் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் குறையும்.
வறுத்த பாதாமை விட பச்சையாக சாப்பிட்டால் அதிக சத்து கிடைக்கும்.
மேலும் பாதாமை நீரில் ஊற வைத்தும் சாப்பிடலாம்.

7.வெள்ளரிக்காய்

உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க வெள்ளரிக்காயை தினமும் சாப்பிடலாம்.
இதில் சிறிது உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சாப்பிடும்போது இன்னும் ருசியாகவும் இருக்கும்.
வெள்ளரிக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்ளும்போது நீங்கள் இளமையோடும் ,சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

8.பேரிச்சம்பழம்

உடலுக்கு ஊட்டத்தை அளிக்கவும் பல குறைபாடுகளை நீக்கவும் உதவும் ஒரு அருமையான பழம்தான் பேரீச்சம் பழம்.
பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம், கால்சியம்,பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள்
அடங்கியுள்ளன.
தற்போது திணை,சாமை,கேழ்வரகுபோன்ற தானியங்களில் கூட பிஸ்கட்டுகள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றது. அது போன்ற தின்பண்டங்களை கூட கூட வாங்கி சாப்பிடலாம்.