Skip to main content

  இனிமே இந்த 8 வகையான ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணுங்க

  நாம் சாப்பிடும் உணவுகளில் சில உடலுக்கு நன்மை தரக் கூடியதாகவும் பல தீமை தரக்கூடியதாகவும் இருக்கும்.ஸ்னாக்ஸ் என்றாலேபஜ்ஜி, வடை பேக்கரிகளில் செய்யப்பட்ட பிஸ்கட், கேக், பப்ஸ், சிப்ஸ் இவைகளே நமது தேர்வாக இருக்கிறது.ஆனால் இதுபோன்ற தின்பண்டங்களை தவிர்த்து கீழ்கண்ட தின்பண்டங்களை எடுத்துக் கொண்டால் நமக்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும். 1.கடலை மிட்டாய் ஆரோக்கியமான தின்பண்டங்களில் முக்கிய இடத்தை வகிப்பது கடலை மிட்டாய்.கடலை மிட்டாய் உள்ள புரதச் சத்துக்கள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.மேலும் […]

  Read More

  தேனீர் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால்..?

  தேனீர் உடலிலுள்ள எலும்புக்கு அதிக சக்தியை அளிக்கக் கூடியது. தேநீரை ஒருமுறை எடுத்துக்கொள்வதால் சுறுசுறுப்பையும், நாள் முழுக்க புத்துணர்ச்சியும் பெறலாம். அதுவே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அதிக தேநீர் உடலுக்கு அதிக கேடுகளை விளைவிக்கும். ஒரு கப் தேனீர் என்பது ஆரோக்கியமான ஒன்று. உங்கள் எலும்புகளை பலப்படுத்தும். அதுவே இரண்டு கப்பிற்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உங்கள் எலும்புகளை பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். டீயில் இருக்கும் நச்சுத்தன்மை கீழ்கண்ட பக்க விளைவுகளை […]

  Read More

  சாப்பிட்ட உணவு செரிக்கவில்லை என்பவர்களுக்கு 5 தீர்வுகள்

  சிலர் அசைவம் அல்லது எண்ணையில் பொரித்த உணவு வகைகள் அதிகம் சாப்பிட்டுவிட்டு வயிறு உப்புசமாக இருக்கிறது என்று கடையில் கிடைக்கும் செயற்கையாக செய்யப்பட்ட மாத்திரைகள் அல்லது குளிர்பானங்களை உட்கொள்வர். இவ்வாறு செயற்கையாக தயாரிக்கப்பட்ட பானங்கள் மேலும் அஜீரணத்தை தான் உண்டாகுமே தவிர நிவாரணம் கிடைக்காது. ஆனால் அதற்கு பதிலாக கீழ்கண்ட மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்களை எடுத்துக் கொண்டால் வயிறு சரியாகும். 1.புதினா வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் மற்றும் வாந்தி போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக புதினா […]

  Read More

  நல்ல பழக்கங்களை உருவாக்க கூடிய 6 செயல்கள்

  உயர்ந்த குறிக்கோள் மட்டும் இருந்தால் வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறீர்களா?.அது தவறு உயர்ந்த குறிக்கோள் மட்டும் ஒருவனை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லாது.உங்களது நடை, உடை, பாவனை போன்ற மேலும் பல நல்ல பழக்க வழக்கங்களும் சேர்ந்து தான் உங்களின் வெற்றியை முடிவு செய்யும்.இங்கே சில நல்ல பழக்கங்களை தொகுத்து வழங்கியுள்ளேன். 1.ஆபத்தில் உதவுவது நம் உடன் இருப்பவர்கள் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தால் நம்மால் முடிந்த அளவு அவர்களுக்கு உதவ வேண்டும். அது […]

  Read More

  மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 4 இயற்கை பொருட்கள்

  நமக்கு பெரும்பாலும் நோய் வரும்போது மெடிக்கலில் தேவையான மருந்துகளை வாங்கி சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டு உள்ளோம்.தற்போது மழைக்காலம் வேறு தொடங்கிவிட்டது.ஒருசிலர் பெயின் கில்லர், ஆன்டிபயாடிக் போன்ற மருந்துகளை தெரிந்து வைத்துக்கொண்டு கேட்டு வாங்கி உபயோகிக்கின்றனர்.இதுபோன்று ஆன்ட்டிபயாட்டிக்யை மருந்துகள் மூலம் எடுத்துக் கொள்ளாமல் இயற்கையான தாவரங்களில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். நாம் அன்றாடம் உபயோகிக்கும் கீரை, காய்கறிகள், பழங்கள் இவற்றிலேயே ஏராளமான ஆன்ட்டிபயாட்டிக் உள்ளது.நம் முன்னோர்கள் வேர் ,காய், தண்டு, இலை, விதை இவற்றை எடுத்து லேகியம் மற்றும் […]

  Read More

  உங்களுக்கு பரோட்டா ரொம்ப பிடிக்குமா? அப்போ முதல்ல இத படிங்க

  பரோட்டா என்பது இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையினால் மைதாவில் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சாதாரண பரோட்டா வாகத்தான் இருந்தது.நம் மக்கள் நாவின் சுவைக்கு ஏற்ப கொத்து பரோட்டா ,முட்டை பரோட்டா ,சில்லி பரோட்டா ,வீச்சு என்று விதவிதமாக தயாரித்து உண்ண ஆரம்பித்தனர்.இன்றும் ஒரு சிலருக்கு பரோட்டா சாப்பிடாமல் அந்த நாள் முடியாது என்று மாறிவிடனர்.நாம் ஹோட்டல்களுக்கு சென்றால் இரவு உணவாக பெரும்பாலும் பரோட்டாவையே தேர்ந்தெடுக்கிறோம்.பரோட்டா செய்யும் மைதாவை […]

  Read More

  ஏன் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது

  பெரும்பாலான இந்துக்கள் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். அதற்கு காரணம் இது பெருமாள் கடவுளுக்கு உகந்த காலம், முக்கியமாக பெருமாள் கடவுளை வணங்குபவர்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்லிவந்தனர். ஆனால் உண்மையான காரணம் புரட்டாசி மாதம் தென்னிந்தியாவில் மழை ஆரம்பிக்கும் காலம். இந்த மழை பூமியில் உள்ள சூட்டை அதிகரித்து நமது உடலுக்கு தேவையில்லாத பிரச்சனைகளை உண்டாக்கும்.இந்த வெப்பம் வெயில் காலத்தைக் காட்டிலும் அதிகம். இதனால் சளி காய்ச்சல் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் […]

  Read More

  வயிற்றுப் புண்ணுக்கு (அல்சர்) 6 நிரந்தர தீர்வுகள்

  பெரும்பாலோனோர் வயிற்றுப்புண் என்றதும் உடனே மருத்துவமனைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால் எல்லா வியாதிகளுக்கும் மருத்துவமனை ஒன்றே தீர்வு ஆகாது. சிறிய சிறிய உடல்நல பிரச்சனைகளுக்கு வீட்டிலிருந்தே தீர்வு காணலாம். வயிற்றுப் புண்ணை சரிசெய்ய வீட்டில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் மருத்துவ குணம் கொண்ட உணவு பொருட்களே போதுமானது. 1.மணத்தக்காளி கீரை சிலர் மணத்தக்காளி கீரையை கசப்பு காரணமாக தவிர்க்கின்றனர். ஆனால் வயிற்றுப் புண்ணை சரிசெய்ய மணத்தக்காளி கீரை பெறும் பங்காற்றுகிறது. வாரம் மூன்று முறை மணத்தக்காளிக் […]

  Read More

  உடல் பருமனை விரைவாக குறைக்க 13 வழிமுறைகள்

  ஹார்மோன் உருவாக்கம் மற்றும் உணவு செரிமானத்திற்கு நம் உடலுக்கு முக்கியமான ஒன்று கொழுப்பு சத்து. ஆனால் அதிகப்படியான கொழுப்பு நம் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை உயர்த்தும். அதுதான் பருமனாக இருப்பதற்கான காரணம். உடல் பருமன் என்பது இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் உருவாக காரணமாக இருக்கின்றது. மாறிவரும் உணவுப் பழக்கத்தினால் இன்றைய தலைமுறையினர் பெரும்பாலானோர் ஒபேசிடி பிரச்சனையை சந்திக்கின்றனர். உங்கள் BMI ஐ சரிபாருங்கள்: BMI கணக்கீட்டைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உடல் கொழுப்பு ஆரோக்கியமாக […]

  Read More

  வார இறுதியில் சலிப்பான நேரத்தை மாற்றும் 12 சுவாரஸ்யமான பொழுதுபோக்குகள்

  ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கையில் சில பொழுது போக்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.பொழுதுபோக்குகள் வாழ்க்கையில் நம்பிக்கையை உருவாக்குகின்றன. ஏனென்றால் எதையாவது நன்றாக கற்றுக் கொள்வது வாழ்க்கைக்கு மிகவும் பலனளிக்கும்.அது நம்மை மகிழ்விக்கும், மேலும் நம் வேலையில் சிறப்பாக செயல்பட உதவும். இங்கே நம் வாழ்க்கை முறையை மாற்றக் கூடிய சில பொழுது போக்குகளை தொகுத்து வழங்கியுள்ளேன். 1.பைக் / மிதிவண்டி சவாரி பைக் சவாரி என்பது வார இறுதி நாட்களில் பொழுது போக்க மிகவும் சிறந்த வழி. ஒவ்வொரு நாளும் […]

  Read More